பாகிஸ்தானில் திருமணமாக இருந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டு வேறொரு நபருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மாதியாரி மாவட்டத்தில் உள்ள ஹாலா நகரில் மாதரி பாய் என்ற இந்து பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, திருமண மண்டபத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் மாதரி பாயை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், அவரை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்து, ஷா-ருக்-குல் என்ற இஸ்லாமியருடன் […]
