சொத்துக்காக அண்ணனை தம்பிகளே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் கரிசல்பட்டியில் மூர்த்தி தங்கம்மாள் என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுடைய மகன்கள் காசிராஜா, விருமாண்டி, ஐகோர்ட்டு ராஜா, கார்த்திக் ராஜா ஆகும். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூர்வீக வீடு தொடர்பாக அண்ணன் தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விருமாண்டி தனது குடும்பத்துடன் சொக்கனூரில் வசித்து வந்தார். […]
