சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியாகியுள்ளது. உணவு டெலிவரி ஊழியர் சென்ற வீடுகள், மற்றும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை விவரங்களை சேகரித்து வருகிறது. தற்போது, அந்த 26 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் முன்பு டெல்லியிலும் நடந்துள்ளது. அதன் காரணமாக சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]
