முதுமலை வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் காட்டு தீ மலர்களை பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தற்போது கோடை காலத்தில் மரங்களில் இலைகள் உதிர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் முதுமலை வனத்தில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் காட்டு தீ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள் காட்டுத்தீ மலர்கள் என்றும், கிளிமூக்கு மலர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வகை மலர்களை சற்று தூரத்தில் நின்று […]
