கர்நாடகாவுக்கு மழை வெள்ள சேதாரத்தை சரி செய்ய 50,000 கோடி கேட்டு பிரதமரை சந்திக்க இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றி விட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா , மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. சிவமோகா-வில் உள்ள துங்கா நதியில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் […]
