தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரமே வெள்ளத்தில் மிதந்ததில் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 15 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதில் குறிப்பாக ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி பகுதியில் தொடர் கனமழையால் பல ஏரிகள் நிரம்பி வழிகின்றது. இதன் காரணத்தினால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வாணியம்பாடி […]
