ஆபத்தை உணராமல் மாணவ-மாணவிகள் காட்டாற்றை கடந்து செல்வதால் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாக்கம்பாளையம் செல்லும் வழியில் இருக்கும் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் சாலை சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று […]
