Categories
உலக செய்திகள்

ஏமனில் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம்..! திகில் காட்சி

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று வடக்கு மாகாணம் அல் ஜாஃப்பில் விபத்துக்குள்ளானது. ஏமன் ராணுவ பகுதிகளுக்கு அருகே சவுதி நாட்டு போர் விமானம் விழுந்ததாக சவுதி கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்  தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பொறுப்பேற்றுள்ளனர். தரைவழி ஏவுகணைகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதலை நடத்தியதாக உறுதியளித்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த விவரங்கள் சவுதி அரேபியா […]

Categories
உலக செய்திகள்

சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் விமான விபத்தில் பலி…! 

ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானியின் கொலைக்கு காரணமான மைக்கேல் தே ஆன்ரே உள்ளிட்ட பல மூத்த சிஐஏ அலுவலர்கள் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஊடகம் செய்தி […]

Categories
உலக செய்திகள்

கலிபோர்னியா ஏர்போர்ட்டில் விமான விபத்து: 4 பேர் பலி

கலிபோர்னியாவில் உள்ள விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ளது கொரோனா மாநகராட்சி விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் 4 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் உயரே எழும்பும் போது ஓடுதளத்தின் கடைசி பகுதியில் உள்ள புதருக்குள் திடீரென விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த […]

Categories
உலக செய்திகள்

176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமான விபத்து: கருப்பு பெட்டியை ஒப்படைக்க கனடா வலியுறுத்தல்

176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சிடம் ஒப்படைக்க கோரி கனடா அரசு ஈரானை வலியுறுத்தியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளாகியது.இந்த விபத்தில் 57  கனடா நாட்டு மக்கள்  உட்பட மொத்தம் 176 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதலில் அறிவித்த ஈரான், பின்னர் ஈரான் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

ஈரான் விமான விபத்து: வீடியோ எடுத்தவர் கைது! 

உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான வீடியோவை பதிவு செய்தவர் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 – 800 விமானம் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று விபத்துக்குள்ளானது. விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து […]

Categories

Tech |