நவி மும்பையில் உள்ள சிற்றோடையில் ஏராளமான புலம்பெயர்ந்த ஃபிளமிங்கோ பறவைகள் ஒரே நேரத்தில் வந்துள்ளன. கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து இந்தியாவுக்கு பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக மே3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. […]
