கடலில் மூழ்கிய மீனவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கேரள மாநிலத்தில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்துள்ளனர். அந்த கடந்த 17-ஆம் தேதி 12 பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளனர். அந்த 12 பேரில் 9 மீனவர்கள் குமரியை சேர்ந்தவர்கள் என்றும், 3 மீனவர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 12 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகு திடீரென வீசிய சூறைக்காற்றால் […]
