நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக ருக்மணி என்ற படகில் சென்று உள்ளனர். இந் நிலையில் இந்த ருக்மணி படகின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் படகில் இருந்த மீனவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் திணறினர். அந்த சமயம் புதுச்சேரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் என்ற விமானத்தில் இருந்த வீரர்கள் நடுக்கடலில் […]
