தடுப்பணையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசிஷ்ட நதி ஓடுகிறது. இந்நிலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே காட்டுக்கோட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காட்டுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் போன்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தவில்லை. எனவே லட்சக்கணக்கான மீன்கள் […]
