சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் . விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரிநாயக்கன் பட்டி என்னும் ஊரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அதிக அளவில் தீ பரவி ஆலை முழுவதும் எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வந்தது. […]
