திருப்பூர் அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை அடுத்த தொடக்கப்பள்ளி தெருவில் முதல் மாடியில் கணவன் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாடியின் ஒரு பகுதியில் உள்ள ஓலைக் கொட்டகையில் மனைவி சமையல் செய்து வர கணவன் மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டர் கசிவு காரணமாக சிலிண்டரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி […]
