வீட்டிற்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைதரைப் பகுதியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் ஒரு நாகப்பாம்பு பதுங்கியிருந்ததை அவர் கண்டுள்ளார். உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதனை விரட்ட முயன்றுள்ளார். ஆனால் அந்த பாம்பு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் அவர்கள் அரவிந்த் வீட்டிற்கு விரைந்து வந்து […]
