கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்த நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறைய சமுத்திரம் கிராமத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் கிணற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மோட்டாரில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்வதற்காக சீனிவாசனின் உறவினரான ரமேஷ் என்பவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதனை அடுத்து பழுதை சரி பார்த்துவிட்டு மேல ஏறும் போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து […]
