டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தினால் மதுரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பைக்காரா பகுதியில் பசுமலை துணை மின் நிலையம் அமைந்துள்ளது இந்த துணை மின் நிலையத்தில் இருந்துதான் வைகை ஆற்றின் தென் பகுதி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் திடீரென மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் […]
