சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் ஊராட்சி அன்பு நகரில் காசியம்மாள் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வெளியூரில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்ததோடு, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
