ஆரணியில் உள்ள வக்கீல் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியின் டி.ஆர்.எஸ். நகரில் வசித்து வருபவர் புலிகேசி . 45 வயதான இவர் வக்கீலாக இருக்கிறார் . புலிகேசிக்கு கல்யாணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு நேற்று முந்தினம் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலையில் வீட்டின் முன்புற கதவு திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் புலிகேசியிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். […]
