வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக வனப்பகுதியில் இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை, மொரப்பூர், கோட்டப்பட்டி போன்ற வனச்சரகங்கள் இருக்கின்றன. இந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றி, மான், மயில், குரங்கு போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரை தேடி விவசாய கிணறுகளுக்கு வரும் இந்த விலங்குகளை சில மர்ம நபர்கள் வேட்டையாடுகின்றனர். மேலும் இவ்வாறு தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் நீர்நிலைகளில் தவறி விழுவது, சாலையை […]
