கெங்கபுரத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதால் அங்கு காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெங்கபுரம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரகுமார் என்பவரும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின் தேர்தல் முடிவடைந்ததும் கெங்கபுரத்தைச் சேர்ந்த சேட்டு என்பவர் வேட்பாளர் ராஜாவிடம் சென்று அவரது வீட்டில் பிரச்சனை நடப்பதாகவும் […]
