கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டி. கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. சுமார் 3 1/2 கோடி செலவில் கோவில் கோபுரங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இதனால் நேற்று கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள், யாத்ரா தானம், தீர்த்த கலசங்கள் கோவிலில் வலம் […]
