அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்றும், மற்றவர்கள் சுயநலத்திற்காக செயல்படுகின்றனர் என்று கே.பி முனுசாமி கூறியிருக்கிறார். பெங்களூரு சிறையில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி முறைப்படி விடுதலையானார். ஆனால் இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்த காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்த பின் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சசிகலா காரில் வந்து கொண்டிருந்த போது, அவரது காருக்கு முன்னும் பின்னும் […]
