வேலைக்கு செல்லாமல் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தந்தை மகனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி செட்டிகுளம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பகுதியில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது முதல் மனைவியான செல்வி என்பவர் விவாகரத்து பெற்றுக்கொண்டு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இவருக்கு கீர்த்தனா, மோனிஷா என்ற 2 மகள்களும், கோகுல் என்ற மகனும் இருக்கின்றனர். […]
