தண்ணீரில் மூழ்கி தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலடியூரில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த இர்பான் முகம்மது (34) என்பவர் தனது மனைவி ஜூட்மேரிசுசி, மகள்கள் இஷானா (8), இஷ்ரா (5) ஆகியோருடன் கடந்த மாதம் ஆலடியூருக்கு சென்றுள்ளார். கடந்த 1 மாதமாக தங்கியிருந்த இர்பான் முகம்மது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் விக்கிரமசிங்கபுரம் அருகே […]
