விவசாயிகள் மெயின் ரோட்டை நெல் களமாக பயன்படுத்தி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நெல் களங்கள் தற்போது பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கண்மாய்கள் நிரம்பியதால் பொதுமக்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலைமையில் நெல் களம் இல்லாததால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். […]
