விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நுழைவு வாயிலில் இருந்த போலீசார் சுப்பிரமணி கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அப்போது திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை சுப்பிரமணி உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் நடத்திய விசாரணையில் சுப்பிரமணி கூறியதாவது, […]
