விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளங்குளி பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இரவு நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மாடுகளை ஆறுமுகம் வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறுமுகத்தை சுற்றிவளைத்த 4 மர்ம […]
