யானை தாக்கி மாடு மேய்க்க சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நார்ப்னட்டி கிராமத்தில் விவசாயியான பஜ்ஜப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த முதியவர் வனப்பகுதிக்கு தனது மாடுகளை மேய்க்க சென்றுள்ளார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் இந்த முதியவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் வனப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது […]
