வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த குடும்பத்தினர் உணவில் விஷம் கலந்து தின்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஹானா, சஞ்சனா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் கடந்த ஒன்றரை வருடமாக வேலைக்கு செல்லாமல் சுப்பிரமணி வீட்டிலேயே […]
