கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பல்வேறு பகுதிகள், கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]
