படித்து கொண்டிருக்கும் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் செட்டி தெருவில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மகன் உள்ளார். இவர் வழக்கம் போல தனது வீட்டில் இரண்டாவது மாடியில் உள்ள பால்கனியில் உட்கார்ந்து படித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்த நிதிஷை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி […]
