விமான நிலையத்தில் கணவரை வழி அனுப்புவதற்காக மனைவி போலியான இ-டிக்கெட் மூலம் விமான நிலையத்திற்குள் வந்ததற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் மட்டும் ஆவண பரிசோதனை நடைபெற்றுள்ளது. இந்தப் பரிசோதனை முடிந்த பின் அவர்கள் விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நவாஸ் ஷேக் மற்றும் அவருடைய […]
