டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி […]
