சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தொற்றை […]
