முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் கிராமத்தில் பேக்கரி கடைகள், மளிகை கடைகள், டீ கடைகள் போன்ற பல கடைகளில் நங்கவரம் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தவர்களுக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் […]
