வாலாஜாவில் செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வாலாஜா நேதாஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். 32 வயதான இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். வெங்கடேசனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை நேரத்தில் வெங்கடேசன் வீட்டில் இருந்தபோது, அவருக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து செல்போனில் கால் வந்துள்ளது. அதனை எடுத்து பேச வெங்கடேசன் முயன்றபோது போன் திடீரென வெடித்து சிதறியது. இதில் அவரின் தலை, […]
