கோவை மாவட்டம் சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை குடியிருப்பு பகுதிக்கு அருகே எரிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் காடம்பாடி பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் மர்ம நபர் ஒருவர் காலாவதியான ஆங்கில மருந்துகளை கொட்டி எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விசாரித்த பொழுது, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ராஜா சிங் ஆகியோருக்கு சொந்தமான மருந்தகத்திலிருந்து அவற்றைக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். பின் […]
