நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தத் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு குற்றவாளிகளும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், “இவ்வழக்கு குறித்த எந்த மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் இல்லை. மேல் […]
