இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கனிராவுத்தர்குளம் காந்திநகர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான நிவேதா(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவன விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் நிவேதா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிவேதாவிற்கு மாத்திரை வாங்குவதற்காக ராமசாமி மெடிக்கலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து […]
