கோபிசெட்டிப்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே இருக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான 72 வயதுடைய சண்முகம் என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார்.. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி டியூசன் சென்றபோது, சண்முகம் சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.. […]
