சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரிலிருந்து மாவு அரைக்கும் கிரைண்டரில் உபயோகப்படுத்தக்கூடிய குழவி கற்களை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேன் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் சுந்தரலிங்கம், மற்றும் […]
