Categories
Uncategorized

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி

தமிழ்நாட்டில் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நடந்த வெவ்வேறு விபத்துகளில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

2019 – 2020ஆம் ஆண்டிற்கு கூடுதல் நிதியாக 6,580 கோடி ஒதுக்கீடு – நிதி அமைச்சர்..!!

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசுக்கு விருது மழை! – முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு அரசால் விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் லண்டனில் புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகக் கூறிய அவர், […]

Categories
மாநில செய்திகள்

உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்.!!

கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிசாமிக்கு தில் இல்லை”… வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் காட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்கு தில் இல்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், […]

Categories
மாநில செய்திகள்

பெண்ணை காப்பாற்றும் போது உயிரிழந்த இளைஞர்…. குடும்பத்திற்கு ரூ 10,00,000 – முதல்வர் அறிவிப்பு.!!

திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முன்பதாக முதல்வர் பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் பலத்த காயமடைந்த சார்லி என்ற இளைஞர் குடும்பத்திற்கு ரூ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீ… சீ…. என்ன ? இது….. ஆளுநர் உரையை கிண்டல் செய்த ஸ்டாலின் ….!!

ஆளுநரின் உரை , பய அறிக்கையாக ( Statement of Fear) மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்: நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் என சொல்லும் தமிழ்நாடு அரசு, குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என எப்படி சொல்லலாம். 250க்கும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதைப் பற்றி பேசாதீங்க… யாருக்கும் அஞ்சமாட்டோம்…. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மறைகிறதா ‘இரட்டை இலை’…. வரலாற்றை மாற்றி எழுதிய திமுக..!!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்ற வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று, ஜனவரி 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. 513 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 5087 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

கிறிஸ்துமஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர், மக்கள் என அனைவரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். அந்த வகையில், அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ”அனைவரிடத்திலும் அன்பு, பகைவரிடத்திலும் பரிவு, சகோதரத்துவம் உள்ளிட்ட வாழ்க்கை நெறிகளை வழங்கிய இயேசு காட்டிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடத்துநராக இருந்த ரஜினி ‘சூப்பர் ஸ்டார் ஆவோம்’ என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்”

நடத்துநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று தனது கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு ரஜினியைத் தாக்கியுள்ளது. திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் கமல்ஹாசனுக்கு ‘உங்களில் நான்’ என்ற பாராட்டு விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினி, “எடப்பாடி பழனிசாமியின் அரசு நான்கு, ஐந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 பேர் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. தடைகளைத் தாண்டி ஆட்சி நீடித்துக்கொண்டிருக்கிறது. […]

Categories
Uncategorized

இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை..!!

தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடவிருக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. மேலும், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று அதிமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்களும் மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்பிலும் பேசிவருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. நீண்ட காலமாக தமிழ்நாட்டில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாத்திற்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சென்னை காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மாநில விலங்கு வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்……. அரசாணை வெளிட்ட தமிழக அரசு…!!

மாநில வனவிலங்கு வாரியத்திற்கு  புதிய நிர்வாகிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க மனித மற்றும் விலங்கு களுக்கு இணையான மோதல்களை தவிர்க்க, விலங்குகளுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க, அழியும் நிலையில் இருக்கக்கூடிய வனவிலங்குகளை பாதுகாக்க, வன விலங்குகளை வேட்டையாடுவதை தவிர்க்க உள்ளிட்ட காரணத்திற்க்காக  மாநில விலங்கு வாரியம் ஒன்றை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி வைத்தது. இந்நிலையில் தமிழக மாநில விலங்கு வாரியத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தமிழக […]

Categories
மாநில செய்திகள்

“இலவச எண் :1962” கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி……. முதல்வர் திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு…!!

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் அவற்றுக்கு சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை மேற்கொள்ளக் கூடிய நவீன வசதிகள் கொண்ட அம்மா ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலக […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா: ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை …!!

முத்துராமலிங்க தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வரும் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சிறப்பான ஏற்பாடு… தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு.!!

இந்தியா – சீனா இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா – சீனா உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்ட வரவேற்பு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”தமிழகத்துக்கு புதிய மருத்துவ கல்லூரி” மத்திய அரசுக்கு EPS நன்றி ….!!

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் மருத்துக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் தொடர்ந்து அனுமதி கேட்டு வந்த நிலையில் இன்று  தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி,  ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொடங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் ரூ 325 கோடி ரூபாய் மதிப்பிலான அமைக்கப்படும் என்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அதிமுக நிலைத்து நிற்கும்’ அமைச்சர் ஜெயக்குமார் கருத்து ….!!

ஜெயலலிதா கூறியபடி உலகம் உள்ளவரை அதிமுக நிலைத்து நிற்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 48 ஆவது ஆண்டு விழா அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் , தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 48 ….. ”M.G.R , ஜெயலலிதா சிலைக்கு மரியாதை” OPS – EPS பங்கேற்பு …!!

அதிமுகவின் 48_ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு MGR மற்றும் ஜெயலலிதா திருஉருவ சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். 48 ஆவது ஆண்டு விழா அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் , தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி 3… நாங்குநேரி 3… முதல்வர் எடப்பாடி அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்கிறார்.  வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் இரண்டு தொகுதிகளிலும் பரப்புரை செய்யும் நாட்களை திமுக அறிவித்து விட்டது. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வந்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்த முதல்வர் பழனிசாமி..!!

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய  மனு அளித்தார். இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி  பல்வறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், குறிப்பிடப்பட்டிருந்ததாவது,  தமிழகத்தில் முக்கிய திட்டங்களை செயல்படுத்த நிலுவையில் உள்ள ரூ.7,825 கோடி விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் உதவியுடன் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் கோதாவரி – காவிரி இணைப்புக்கான […]

Categories
மாநில செய்திகள்

“எதிர்காலத்தில் நீட் தேர்வில் மோசடிகள் நடக்காது”… முதல்வர் பழனிசாமி உறுதி.!

 எதிர்காலத்தில் நீட் தேர்வில் மோசடிகள் நடைபெறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி  உறுதியாக தெரிவித்தார்.   சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக முதல்வர் பழனிசாமி, 424 பயனாளிகளுக்கும்  ரூ 4.93 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, கீழடியில் 4, 5ஆம்  கட்ட அகழாய்வு பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.  டிஎன்பிஎஸ்சி போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு முடிவுகளில் தமிழக அரசு தலையிடுவது இல்லை என்று பேசினார்.  மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிக்கு… “2 தொகுதிகளின் இடைத்தேர்தல் ராசியானது”… அமைச்சர் செல்லூர் ராஜூ.!!

அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது பற்றி  பேசியதாவது, அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு”… கேப்டன் விஜயகாந்த் உறுதி.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக  கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.   இந்நிலையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது  இல்லத்தில் வைத்து  தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடியில்… “ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் ஈபிஎஸ் தொடங்கி வைத்தார்.!!

சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அம்மா பூங்காவை திறந்தபின் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார் முதல்வர். அத்துடன் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து உடற்பயிற்சியும்  செய்தார். அதன்பின் முதல்வர் பழனிசாமி  பேசுகையில், கச்சுப் பள்ளியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட அமைச்சர்கள்.!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக அமைச்சர்கள் அவரது  இல்லத்தில் வைத்து  நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு  ஆதரவு கோரினர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக சார்பில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடைதேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எங்களுக்கு செல்வாக்கு இருக்கு” தேர்தல் நிரூபிக்கும்- முதல்வர் உறுதி….!!

இந்த தேர்தல் மக்கள் செல்வாக்கு அதிமுகவுக்கு இருப்பதை நிரூபித்துக் காட்டும் என்று தமிழக முதலவர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் , அண்டை மாநிலத்துடன் நல்லுறவில் இருந்து வருகின்றோம். நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் உறுதி. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். ஆனால் மக்கள் நேர்மாறாக தீர்ப்பளித்தார்கள். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்துள்ளனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு கொடுக்கப்பட்து. அதைத்தொடர்ந்து  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மதுசூதனன், கேபி முனுசாமி உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் விருப்பமனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் யார்?…. இன்று காலை அறிவிப்பு..!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை (இன்று)  காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிப்பு – ஓபிஎஸ்.!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.   இந்நிலையில்  நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”மின்சாரம் தாக்கி உயிரிழப்பு” 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டுபேரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு அடுத்தடுத்து இரண்டு உயிரிழப்பு நேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லபாக்கம் சேதுராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மின்சாரவாரியத்தின் அலட்சிய போக்கு என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த  2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும்  முகலிவாக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள்… தமிழக முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை..!!

தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.  தமிழகத்தில் இன்று தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு முக்கிய இடங்களில் தமிழக அரசு சார்பில்  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாள்”… முதல்வர் பழனிசாமி இதயப்பூர்வமான வாழ்த்து..!!

இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு  இதயப்பூர்வமான வாழ்த்துக்களை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு எங்களது இதயப்பூர்வமான […]

Categories
மாநில செய்திகள்

“அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா”… இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை..!!

அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்  மரியாதை செலுத்தினர். சென்னையில் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் அதிமுக கட்சிக் கொடிகள் மற்றும் பேனர், கட் அவுட்  எதுவும் […]

Categories
மாநில செய்திகள்

குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டவர் ஸ்டாலின்… “அவர் கூறுவது அனைத்தும் பொய்”… முதல்வர் கடும் விமர்சனம்..!!

ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும், அரசு எப்படி செயல்படுகிறது என்பது  தெரியாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வர அமெரிக்கா லண்டன், துபாய் என 13 நாட்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். முதல்வரின் இந்த பயணம் குறித்து ஸ்டாலின் முதல்வர் வெறுங்கையுடன் திரும்பியதாக விமர்சனம் செய்தார். பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்றும் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
அரசியல்

“இஸ்ரேல் போகப்போறேன்” காமெடி பன்றாரு EPS… ஸ்டாலின் கிண்டல் …!!

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்த காவிரி நீர் இன்னும் பல இடங்களில் கடைமடைக்கு போய் சேரவில்லை என்றும் கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலப்பது போல் இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க 1…… நாங்க 5….”திமுகவை ஊதி தள்ளும் அதிமுக”…. கெத்து காட்டும் EPS …!!

பேரறிஞ்சர் அண்ணா_வின் பிறந்த நாளின் அதிமுகவின் பொதுக்கூட்டத்தால் திமுக முணுமுணுத்து வருகின்றது. மத்திய அரசு ஜம்மு_க்கு வழங்கி இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்து புதிய சட்டம் சோதாவை நிறைவேற்றியது. இதற்க்கு பாஜகவின் எதிர் நிலைப்பாடு வகித்து தேர்தலை சந்தித்த பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும் திமுக , காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியளவில் பெரிய எதிர் கட்சி மற்றும் பாஜகவிற்கு அடுத்தபடியாக உள்ள தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸை விட திமுக கடுமையாக எதிர்த்து. குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கெல்லாம் வேற லெவல்.. ”ஆக்ஷனில் இறங்கிய EPS” கதி கலங்கும் ஸ்டாலின்….!!

பேரறிஞ்சர் அண்ணா பிறந்த நாளுக்கு அதிமுக 5 மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது திமுகவை கதி கலங்கச் செய்துள்ளது. செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் […]

Categories
அரசியல் பல்சுவை

தொடங்கியது ஓணம் கொண்டாட்டம்…. தமிழக முதல்வர் வாழ்த்து…!!

தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..  கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அத்திப்பூ கோலமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி […]

Categories
அரசியல்

ரூ8,830 கோடி முதலீடு… வெற்றி கண்ட முதல்வர்… ராமதாஸ் பாராட்டு…!!

மூன்று நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்ட முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை  மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தேர்தலில் […]

Categories
அரசியல்

சுற்றுபயணத்தில் வெற்றி கண்ட முதல்வரே…. ஏ.சி.சண்முகம் வாழ்த்து..!!

வெளிநாட்டு சுற்று பயணத்தை மேற்கொண்டு  வந்துள்ள முதல்வரை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை  மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் – துணை முதல்வர் சந்திப்பு… !!

பசுமை வழிசாலையில் இருக்கும் தமிழக முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்து வருகின்றார். இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சென்று 13 நாட்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அங்கே இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யவும் ,  தொழில் துவங்க முன் வரவேண்டும் என்று நேரடியாகவே சந்தித்து வலியுறுத்தி வந்தார்.இந்த பேச்சுவார்த்தையில்  பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. முதல்வர் 13 நாட்கள்   சுற்றுப் பயணங்களை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமி 13  நாள் பயணத்தை முடித்துவிட்டு நாளை சென்னை திரும்புகிறார்..!!

முதல்வர் பழனிசாமி தனது 13  நாள் பயணத்தை முடித்துவிட்டு நாளை அதிகாலை 2 40 மணி அளவில் சென்னை திரும்புகிறார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குசென்றுள்ளார். இதற்காக அவர் கடந்த மாதம் 28ஆம் தேதி பயணத்தை தொடங்கி முதலில்  இங்கிலாந்துக்கும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார். அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும்  தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும்  சந்தித்து  தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு கூறி அதற்குரிய சாதகமான சூழலை […]

Categories
மாநில செய்திகள்

”விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டுக்குரியது” முதல்வர் பழனிசாமி வாழ்த்து..!!

சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கு அயராது பாடுபட்ட விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டுக்குரியது என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இன்று அதிகாலை சந்திரயான் 2 திட்டத்தின்படி விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி  பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு சிக்னல் […]

Categories
மாநில செய்திகள்

என்ன நடக்கிறது…. ”போட்டுடைத்த அமைச்சர்”…. பாதியில் திரும்பும் முதல்வர்..!!

தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு  பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது. முதல்வரின் […]

Categories
மாநில செய்திகள்

ரூ2,300 கோடி முதலீடு… 20,600 பேருக்கு வேலை…. தமிழக முதல்வர் அதிரடி..!!

தமிழகத்தில் ரூ2,300 கோடி முதலீட்டில் 20,600 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்கா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது தமிழகத்தில் 2750 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய உள்ள 16 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்த செய்துகொண்டனர். இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட் சூட் போட்ட எடப்பாடி….. சரணடைந்த சீமான்…. EPS ஆட்டம் தொடங்கியது..!!

ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ”ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்” எடப்பாடி அதிரடி…. கதிகலங்கும் எதிர்க்கட்சி…!!

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு  ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]

Categories
மாநில செய்திகள்

”பதிலடி கொடுத்து பம்மிய எடப்பாடி” லண்டனில் போராட்டம்…!!

லண்டன் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை தமிழகத்தில் இருந்து சென்றார். அவருடன் தமிழக  சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். நேற்று இரவு லண்டன் சென்றடைந்த முதல்வருக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்து  நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கைகளில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை […]

Categories

Tech |