EPFO குறை தீர்ப்பு முகாம் மே 10ஆம் தேதி நடைபெற உள்ளது. சந்தாதாரர்கள்,தொழிலாளர்களின் குறைகளை வேகமாக தீர்த்து வைக்கும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் “நிதி ஆப்கே நிகத்”என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதி குறை தீர்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அதில் தொழிலாளர்களின் குறைகளை தீர்த்து வைக்கப்படும். அதன்படி வருகின்ற மே 10ஆம் தேதி சென்னையில் உள்ள தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி வளாகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடத்துகின்றது. […]
