மாநிலங்களிடையே பயணிக்க இ பாஸ் தடை விதிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது மூன்றாம் கட்ட தளர்வு நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்ட மூன்றாம் கட்ட தளர்வு நிலையில் மாநிலத்திற்கு உள்ளாகவும் மாநிலங்களுக்கு இடையேயும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து மற்றும் ஆட்கள் செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றும், அதற்கு இ பாஸ் போன்ற எந்தநடைமுறையும் இல்லை என்றும் கூறப்பட்டது. இருப்பினும் மாநில அரசுகள் […]
