சுமார் 15 நாட்களுக்கும் மேலாக பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் சுமார் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரை சுற்றி இருக்கும் 6-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் பள்ளிவாசல் பஜார் வழியாகத்தான் போக வேண்டும். இங்கிருந்து தான் திருச்செந்தூர், பெங்களூரு, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு செல்ல கூடிய பேருந்துகள் புறப்படும். இந்நிலையில் […]
