சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் குப்பை தொட்டி அமைத்து தர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர் பேட்டை ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது. இவ்விடத்திற்கு தினமும் ஏராளமான வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இவ்விடத்தில் சில்லறை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்படுகிறது. இக்காரணத்தினால் கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். ஆனால் மிகவும் பிரபலமான இவ்விடத்தில் குப்பைத்தொட்டி வசதி இல்லை. […]
Tag: #environment

மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் . கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனை அடுத்து இத்திட்டத்திற்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இடதுசாரி இயக்கங்களும் ,தமிழ் தேசியவாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி […]
ஜூன் 3 உலக மிதிவண்டி தினம் ..!!

மிதிவண்டி பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இன்று உலகம் முழுவதும் மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் ஜூன் மூன்றாம் தேதி உலக மிதிவண்டி தினமானது கொண்டாடப்படுகிறது. மிதிவண்டிகளில் பயன்பாடானது தற்பொழுது குறைந்து வருகின்ற காரணத்தினாலும், பொதுமக்களுக்கு அது குறித்து ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உடலுக்கும், சுற்றுப்புறத்திற்க்கும் நன்மையைத் தரும் மிதிவண்டியை அதிகம் பயன்படுத்துவோம் என்ற வாசகங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.