புத்துணர்வு முகாமில் கலந்து கொண்ட யானைகள் துதிக்கையால் கட்டி தழுவி தங்களது சந்தோசத்தை வெளிபடுத்தியுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றுப் படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமானது நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்துள்ளனர். இந்த […]
