தென்கிழக்கு இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள போலீசார், பல்கேரியாவிலிருந்து வந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்களை மீட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ மரைனர் கூறும்போது, 38 பெரியவர்களையும், ஒரு இளைஞனையும் அடையாளம் காண அதிகாரிகள் முயற்சித்து வருவதாக இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். மேலும் அக்டோபர் 19 -ஆம் தேதி லாரி நாட்டிற்குள் நுழைந்தது என்றும், “விசாரணைக்கு எங்கள் கூட்டாளர்களுடன் போலீசார் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்கள்” […]
