அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினின் மேற்கூரை கழன்றதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகரில் இருந்து, யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புளோரிடாவின் ஆர்லண்டோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது பாதி வழியில் விமானத்தின் வலதுபக்க என்ஜினின் மேற்கூரை மெல்ல மெல்ல கழன்று ஆட்டம் கண்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக எஞ்சி மேற்கூரை கழன்றதை பார்த்த பயணி ஒருவர் பதறிப்போய் பணிப்பெண்ணிடம் சொல்ல, பணிப்பெண் விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி சற்றும் யோசிக்காமல் மீண்டும் புறப்பட்ட […]
